• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது உயிர்காக்கும் பயிற்சியை தெரிந்தவராக இருக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர்..!

October 16, 2021 தண்டோரா குழு

கோவையில் குறைந்தது 10 லட்சம் பேருக்கு அவசர காலத்தில் உயிரைக் காப்பாற்றுவதற்கான பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

விபத்து மற்றும் அவசர காலத்தில் சக மக்களின் உயிரைக் காப்பதற்கான பயிற்சியை ‘அலர்ட்’ எனும் தன்னார்வ அமைப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ‘அலர்ட்’ அமைப்பு கோவையில் உள்ள பொதுமக்களுக்கு இந்த பயிற்சியை அளிக்க முன்வந்துள்ளது.இதற்காக பி.எஸ்.ஜி மருத்துவமனையுடன் இணைந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானதுமாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், அத்வைத் லட்சுமி நிறுவன நிர்வாக இயக்குனர் ரவி சாம், பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஷ்வரன், ‘அலர்ட்’ தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசுகையில்,

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது உயிர்காக்கும் பயிற்சியை தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவு. அதனை ‘அலர்ட்’ அமைப்பு செய்து வருகிறது.இதனை கோவையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் கோவையில் மட்டும் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கான பணிகள் அடுத்த சில வாரங்களில் தொடங்கும்.

அரசு அதிகாரிகள், காவலர்களுக்கு இந்த பயிற்சியை அளிக்கும் வகையில் அவர்களை நாங்கள் ஒருங்கிணைக்க தயாராக இருக்கிறோம். எந்த நேரத்திலும் நமக்கு ஆபத்து வரலாம்.உண்ணும் உணவு உண்ணும் போதும் கூட பிரச்சனை அல்லது விபத்து ஏற்படலாம். அப்போது முதலுதவி அளிக்க உயிர் காக்கும் அடிப்படை பயிற்சிகள் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் பேசியதாவது:

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.5 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கோவை மாநகரில் சராசரியாக ஒரு நாளைக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தமிழகத்தில் குறைந்து வருகிறது. காவல்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைகள் இணைந்து விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விபத்துக்களால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதில் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறந்த சேவை செய்கிறது. ‘அலர்ட்’ மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து மக்களிடையே முதலுதவி ஏற்படுத்த எடுத்திருக்கும் முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. கோவையில் ஏற்கனவே போக்குவரத்து காவல்துறை மற்றும் ‘உயிர்’ அமைப்பு இணைந்து சாலை விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அலர்ட் நிறுவனர் கலா பாலசுந்தரம் மற்றும் இணை நிறுவனர் ராஜேஷ் திரிவேதி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க