• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை – சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரயில்

October 7, 2021 தண்டோரா குழு

விஜயதசமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை – சென்னை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னை -கோவை அதிவிரைவு சிறப்பு ரயில்( எண்-06005) வருகின்ற 13 ஆம் தேதி மற்றும் நவம்பர் 3 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை நிலையத்தைச் சென்றடையும். இதேபோல், கோவை – சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில்( எண்-06006) வருகின்ற 17 ஆம் தேதி மற்றும் நவம்பர் 7 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு, கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூர், ஈரோடு,சேலம், காட்பாடி நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க