• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் சேலத்தில் விபத்து

September 13, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவராகவும் இருப்பவர் வானதி சீனிவாசன். இவரது மகன் ஆதர்ஷ்(22) சென்னையில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தனது உறவினர் திருமணத்திற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதர்ஷ் கோவை சென்றுள்ளார்.திருமண நிகழ்ச்சிகள் முடித்துவிட்டு நேற்று நள்ளிரவு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்று கொண்டிருந்தாா்.அப்போது கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தின் வழியாக அதிவேகமாக வந்துபோது, மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதியது.

தகவலறிந்த பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கொண்டலாம் பட்டி காவல் துறையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய ஆதர்ஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால், அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கிய ஆதர்ஷ் எந்தவித காயமும் உயிர் தப்பினார்.

அவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் மாற்று காரில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து அன்னதானபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க