• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யோகா தினத்தையொட்டி ஈஷா சார்பில் ஆன்லைன் இசை, யோகா நிகழ்ச்சி !

June 18, 2021 தண்டோரா குழு

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா சார்பில் சிறப்பு இசை நிகழ்ச்சி மற்றும் யோகா கற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஆன்லைன் வாயிலாக நாளை (ஜூன் 19) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடக்கும் இந்த நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசை கலைஞர்கள் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம்,கலைமாமணி காய்த்ரி கிரீஷ், திருமதி அனுஷா தியாகராஜன் ஆகியோர் குரலிசை நிகழும். அத்துடன், யூ.பி.ராஜூ மற்றும் நாகமணி ராஜூ தம்பதியினரின் மாண்டலின் இசை, நெய்வேலி எஸ்.ராதாகிருஷ்ணா அவர்களின் வயலின் இசை, ராஜாராமன் அவர்களின் கடம் இசை, என்.ராமகிருஷ்ணனின் மிருதங்கம் இசை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதற்கு இடையில்,யோகா தினம் தொடர்பாக சத்குருவின் சிறு உரையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ‘சிம்ம க்ரியா’ என்ற யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சி ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ – டியூப் சேனலான Sadhguru Tamil சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். கொரோனா பாதிப்பால் மன அழுத்தம், பயம், உடல் நலன் பாதிப்பு போன்றவை அதிகரித்துள்ள இந்த சூழலில் இந்த இசை நிகழ்ச்சியும் யோகாவும் அதில் இருந்து வெளி வர உறுதுணையாக இருக்கும்.

மேலும் படிக்க