• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கு டிசம்பர் மாதம் 4ம் தேதி

November 26, 2016 தண்டோரா குழு

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலக் குறைவு காரணமாக இந்திய நேரப்படி சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவிற்குப் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஃபிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி 9 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் ரால் காஸ்ட்ரோ தெரிவித்திருந்தார்.

ஆனால், உலக புகழ்பெற்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் உடலுக்கு உலகத் தலைவர்களும், மக்களும் அஞ்சலி செலுத்த வசதியாக, அவரது இறுதிச் சடங்குகளை டிசம்பர் 4 ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க