தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் தனுஷ் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் அத்ரங்கி ரே இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் லுக் டெஸ்ட் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார். இந்தப் படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் 43வது படமான ‘D43’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இப்படத்தில் மாளவிகா மேனன் நாயகியாகவும் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்க உள்ளனர். சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்துக்காக 3 பாடல்களின் பணிகளை கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார். முதலில் பாடல் காட்சிகள் படமாக்கப் படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்