• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி

August 13, 2020 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையத்தில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை புறநகர் பகுதியான செட்டி பாளையம் அருகே அமைந்துள்ளது எல் என் டி பைபாஸ் சாலை. இங்கு இன்று அதிகாலை வேகமாக வந்த கேரளா பதிவு எண் கொண்ட ஈச்சர் லாரியும், தமிழக பதிவு எண் கொண்ட டேங்கர் லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் கேரளாவை சேர்ந்த வீராசாமி மற்றும் உடன் வந்த கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தமிழகத்தை சேர்ந்த சேகர் சிறு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸ் இறந்தவர்களின் உடலை மீட்டு கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். காலை வேலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க