• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

March 24, 2020 தண்டோரா குழு

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக 24-ந்தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி.பிறப்பித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

இதன் மூலம் அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள்
,கடைகள்,வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள்,மூடப்பட்டுள்ளது.ஆம்புலன்ஸ், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.கடைகளுக்கு செல்லும் போதும், மற்றவர்களுடன் ஒரு மீட்டர் இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் ஒன்று கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றிற்கு 144 தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க