• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா வைரஸ் எதிரொலி: இன்று முதல் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும்

March 23, 2020 தண்டோரா குழு

கொரோனா பரவலால் இன்று முதல் வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்பட உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்கிடையில், கொரோனா தாக்கத்தால் வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி வங்கிகள் காலை 10:00 மணி முதல் பகல் 2:00 வரை மட்டும் செயல்படும். சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11:00 மணி முதல் 3:00 மணி வரை இருக்கலாம்.பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடக்கும்.நகைக்கடன் வழங்கப்படமாட்டாது.புதிய வீட்டு கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகளும் நடக்காது.

இத்தகைய விதிமுறைகள் இன்று 23ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சில வங்கிகள் இந்த நேரத்தை அமல்படுத்த ஒரு சில தினங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க