• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்த நபர் கைது

March 18, 2020 தண்டோரா குழு

கேரளாவிலிருந்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பெற்றுவந்து கோவையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக கோவை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிங்காநல்லூர் அருகே உள்ள காமாட்சிபுரம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருநதனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திய போலீசார் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததன் காரணமாக அந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர்.அதில் இருசக்கர வாகனத்தில் இருக்கைக்கு அடியில் 25 ஆயிரம் மதிப்பிலான 2900 லாட்டரி சீட்டுகள் மறைத்து கடத்தி வரபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை சிங்கநல்லூர் காவல் நிலையம் அழைத்துச் சென்பழறு விசாரணை நடத்தினர்.

அதில் பிடிப்பட்ட நபர் திருச்செந்தூரைச் சேர்ந்த பிரபு என்பது கோவையில் தங்கியிருக்கும் பிரபு கேரளாவிலிருந்து லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து பிரபுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க