• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இசைக்கலைஞர்களை வியக்க வைத்த மாணவியின் புல்லாங்குழல் அரங்கேற்றம்

March 16, 2020

கோவையில் இளம் மாணவி வாசித்து அசத்திய கர்நாடக இசை புல்லாங்குழல் அரங்கேற்றத்தை மூத்த இசைக்கலைஞர்கள் வியந்து பாராட்டினார்.

பட்டுக்கோட்டை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் இன்பாயினி அன்பரசன். கோவையில் கல்வி பயின்று வரும் இவர், குழந்தை பருவத்திலிருந்தே புல்லாங்குழலில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவரது அவரது ஐந்து வயதில் சிங்கப்பூரின் குளோபல் இந்தியன் கலாச்சார மையத்தில் இசை பயில துவங்கிய இவர், குளோபல் இந்தியன் கல்சுரல் செண்டரில் குரல் மாணவியாக சேர்ந்த இவர். புல்லாங்குழல் வாசிப்பதில் ஆர்வம் அதனை கற்க ஆர்வம் காட்டினார்.இந்நிலையில் புல்லாங்குழல் வாசிப்பில் இவரது ஆர்வம் கருதி,கோவை சர்தார் வல்லபாய் படேல் ஆடிட்டோரியத்தில் “கர்நாடக புல்லாங்குழல் அரங்கேற்றம் நடைபெற்றது. இசைக்கலைஞர்கள் குழுவினர்களான , நாகை ஸ்ரீராம்-, மன்னார்குடி ஈஸ்வரன்- , கலைமாமணி ஸ்ரீ வைகோம் ஆர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து இன்பாயினியின் பிரத்தியேக கர்நாடக புல்லாங்குழல் அரங்கேற்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வன்ஷித் வானி, தென்றல் குடும்பத்தார் மற்றும் அன்பரசன் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் என் ரமணி, ஸ்ரீ நாகை ஆர் முரளிதரன், பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் முன்னிலையில் அவர் வாசித்த புல்லாங்குழல் இசை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க