• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆணைகட்டியில் பெண் மாவோயிஸ்ட் கைது

March 11, 2020

கேரள வனப்பகுதியில் மாவோஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு நிலையில் இன்று ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை கேரளா வன பகுதியான ஆனைகட்டி, பில்லுர்டேம் ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.இதையடுத்து மாவோஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க மாவோஸ்ட் சிறப்பு தடுப்பு பிரிவு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 5 குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக எல்லை பகுதிக்குள் மாவோயிஸ்ட் கும்பல் ஊடுருவ வாய்ப்புகள் உள்ளதையடுத்து கேரளா எல்லையை ஒட்டிய தமிழக பகுதிகளில் போலீஸ் கண்கானிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மஞ்சூர் அருகே நெடுகல்கம்பை ஆதிவாசிகள் கிராமத்திற்கு சென்ற மாவோயிஸ்டுகள் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று அதிகாலை
கோவை ஆனைகட்டி பகுதியில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க