• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 250 பேருக்கு கராத்தே பிளாக் பெல்ட் வழங்கிய தியகராஜன்

March 7, 2020

கராத்தே பயிற்சியில் 8 படிநிலைகளை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் 250 பேருக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெற்றது.

கோவை,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கராத்தே பயிற்சி மேற்கொண்டு அதில் 8 படி நிலைகளை வெற்றிகரமாக முடித்தவர்களு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி கோவை ஆவரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இண்டியா ஹாலில் நடைபெற்றது.ஜித்தோ குகாய் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஜித்தோ குகாய் தேசிய தலைவர் கராத்தே தியாகராஜன், ஜித்தோ குகாய் தேசிய பொது செயலாளர் முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 250 மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்க பொது செயலாளர் ஆல்பர்ட் பிரேம்குமார், சென்சாய்.அப்துல் சுபான், சென்சாய் பீட்டர் பால், சென்சாய் சண்முகம், சென்சாய் பால முரளி, சென்சாய் சாதிக் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க