• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து திருமணம் செய்ய வற்புறுத்தியவர் கைது

March 7, 2020 தண்டோரா குழு

திருமணம் ஆன பெண்ணை புகைப்படம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து, திருமணம் செய்ய வற்புறுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் நர்மதா. திருமணம் ஆன இவர் சில மாதங்கள் சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது நர்மதாவிற்கும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த டாக்சி ஓட்டுனர் ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகிய இருவரும் ஒன்றாக இருப்பது போல் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு நிர்மதாவை ராஜா வற்புறுத்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து, ராஜாவின் தொல்லை தாங்க முடியாமல் நர்மதா கோவைக்கே திரும்பி வந்துள்ளார். நர்மதாவின் கோவை முகவரியை தெரிந்து கொண்ட ராஜா, கோவைக்கு வந்து மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியதோடு, திருமணத்திற்கு சம்மதிக்காவிட்டால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக ராஜா மிரட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து நர்மதா இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரினை தொடர்ந்து ராஜா மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க