• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டில்லி கலவர பகுதிகளை பார்வையிட்ட கோவை எம்பி

March 3, 2020

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஆழப்புலா நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஆரிப் ஆகியோர் செவ்வாயன்று வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரம் நடந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் வெளியிட்டுள்ள கானொலி காட்சியில் கூறியிருப்பதாவது,

கலவரம் நடைபெற்ற வடகிழக்கு டில்லியின் பலபகுதிகள் எரிந்து சாம்பலாகிக்கிடக்கின்றனர். காவல்துறையினர் அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட எங்களுக்கு அனுமதிக்கவில்லை. ஏனென்றால் எரிந்து சாம்பலான அப்பகுதியின் கோரம் வெளிஉலகம் தெரிந்துவிடக்கூடாது என அவர்கள் எச்சரிக்கையாய் அதனை மறைக்க முயல்கின்றனர்.

இப்பகுதியிலிருந்து ஒண்ணரை கிலோ மீட்டர் தூரத்தில்தான் உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளது. இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக அன்புடனும், சகோதரத்துடனுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குள் எப்போதும் எந்த பகையும் இருந்ததே இல்லை என்பதை இவர்களிடம் பேசியதிலிருந்து அறிய முடிந்தது. பின்னர் எப்படி இந்த தாக்குதல் நடைபெற்றது என்றால் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த ஆர்எஸ்எஸ். பஜ்ரங்தள் கிரிமினல்கள்தான் இப்பகுதிக்கு வந்து கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். இங்கு 16க்கு மேற்பட்ட இஸ்லாமிய பள்ளிவாசல்களை தகர்த்து எரித்துள்ளனர். எந்தவொரு இந்து கோவில்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆகவே திட்டமிட்டு இங்கு ஒரு கலவரத்தை உருவாக்கி மதப்பிரிவினை உருவாக்க வேண்டும் என்றே இக்கலவரத்தை செய்துள்ளனர் என்பது கண்கூடாக தெரிகிறது. ஏற்கனவே 1969களிலும், குஜராத்தில் 2002களிலும் செய்ததுபோல இங்கும் அத்தகைய கலவரத்தை நடத்த முயன்றுள்ளனர். இதனால் ஏராளமான முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும், நிறுவனங்களும் குறிவைத்து தகர்த்தும், எரித்தும் தங்களின் வெறித்தனத்தை காட்டியுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு சீக்கிய சகோதரர்கள் உடன் நின்று உணவு, உடை உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதேபோன்று மார்க்சிஸ்ட் கட்சியும் வலுவான நிவராணகுழு அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுவீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இங்கு தற்போதும் மிகவும் மோசமான சூழல் நிலவி வருகிறது. நாங்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கூறியதுபோல இக்கலவரம் குறித்த நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தேவையான நஷ்ட ஈடு தரவேண்டும். கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் முழு பொருப்பு போலிசின் தோல்வியே காரணமாகும். காவல்துறையின் ஆதரவுடன் குறிவைத்து முஸ்லீம்களின் உயிர்களும், உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் உள்துறை அமைச்சர் அமித்சா ராஜினமா செய்ய வேண்டும் அல்லது அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது என்பது இப்பகுதிக்கு வந்த பார்த்தவர்களாள் புரிந்து கொள்ள முடியும். அதுவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கும் என உணர்கிறோம். நாங்கள் இங்கு பார்வையிட வந்தபோது இந்து, முஸ்லீம், சீக்கியர் என எல்லா மத்த்தினரும் எங்களை அன்புடன் வரவேற்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று எங்களிடம் நடந்தவைகள் குறித்து விளக்கினர். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆதரவை தெரிவித்தோம். உங்களோடு நிற்போம் என்கிற உறுதியையும் அளித்தோம் என்றனர்.

மேலும் படிக்க