• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 2 மணி நேரத்தில் அதிக ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டி உலக சாதனை – ஒருங்கிணைப்பாளருக்கு விருது

March 2, 2020 தண்டோரா குழு

கோவையில் 2 மணி நேரத்தில் அதிகமான ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டி உலக சாதனை நிகழ்வை நடத்திய ஒருங்கிணைப்பாளருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

2 மணி நேரத்தில் அதிகமான ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டி உலக சாதனை முயற்சியாக கோவையை சேர்ந்த பள்ளி மாணவ , மாணவிகள் கடந்த நவம்பர் மாதம் ஈடுபட்டனர். ஐஸ்வர்யா , லட்சுமி குழுவினர் சார்பாக நடைபெற்ற . இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ , மாணவிகள் 67 பேர் கலந்து கொண்டனர்.

ஐந்து வயது முதல் 18 வயது வரையிலானவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி உலக சாதனை நிகழ்வுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் , இந்த நிகழ்வு எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் , ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி , இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடெமி , தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என 4 உலக சாதனை நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல செய்தி வாசிப்பாளர் பொற்கொடி செல்வராஜ், எலைட் சர்க்கிள் பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை நிகழ்வை நடத்திய ஐஸ்வர்யா லட்சுமி நாகராஜனிற்கு விருது வழங்கி கவுரவித்தனர்.

மேலும் படிக்க