• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாடையில் சிலிண்டரை ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

February 18, 2020

சமையல் கேஸ் விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசை கண்டித்து பாடையில் சிலிண்டரை ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேஸ் சிலிண்டர் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர் குறிப் பாக ஏழை நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து,கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமையல் கேஸ் சிலிண்டரை பாடையில் எடுத்து வந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திடீரென சமையல் கேஸ் சிலிண்டரின் விலைற்றிய மத்திய அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தியபடி காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிர் அமைப்பினர் உட்பட பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க