• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரசாந்த் கிஷோர் திராவிடரா, ஆரியரா என ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் – முரளிதர ராவ்

February 6, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுகிறார் எனவும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் ராமர் கோவில் அறக்கட்டளை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறோம். ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கை, இதனால் ஒட்டு மொத்த இந்தியர், உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். , இன்னும் சில ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டப்படும். அனைத்து இந்திய மொழிகளும் கடவுளிடம் செல்லும் வழியாக உள்ளது. தமிழ், சமஸ்கிருதம் என பிரித்து பார்க்க வேண்டாம். பாஜக அனைத்து மொழிகளையும் சமமாக பார்க்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுவதை ஏற்க முடியாது. நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்ததை வரவேற்கிறோம். ,
அடுத்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சிஏஏ, காஷ்மீர், ராமர் கோவில் குறித்து பாஜக பிரச்சாரம் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார மந்த நிலை பலமுறை வந்துள்ளது எனவும், பொருளாதார மந்திநிலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார். பிரசாந்த் கிஷோர் வட இந்தியரா, தென் இந்தியரா, திராவிடரா, ஆரியரா என ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் எனவும், டெல்லி தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார். ஜெயக்குமார் பாஜக தலைவர் அல்ல. கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு தனிப்பட்ட கருத்து இருக்கும் எனவும், அதிமுக – பாஜக இடையே சுமூகமான உறவு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க