பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே தனது அடுத்த படத்துக்கான கதை கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் விஜய். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக பல்வேறு இயக்குநர்கள் கதை சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் சுதா கொங்கராவும் கதை விஜய்க்கு கதை சொல்லியுள்ளாராம். அந்த கதை மிகவும் பிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இறுதிக்கட்டக் கதை விவாதத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் விஜய் – சுதா கொங்கரா இருவரும் ஈடுபடவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு