• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அச்சு அசலாக எம்.ஜி.ஆர் தோற்றத்தில் கலக்கும் அரவிந்த் சாமி !

January 17, 2020 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.எல் விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்க அரவிந் சாமி எம்.ஜி.ஆர்-ஆக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக பிரியாமணி நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே ஜெயலிதாவின் பிறந்தநாள் அன்று தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போனது கங்கனா ஜெயலலிதா போல் இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்தநிலையில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

எம்.ஜி.ஆர் பிறந்த நாளான இன்று தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த சாமியின் தோற்றத்தை அரவிந்த சாமி தனது ட்விட்ட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், தலைவி படத்தில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று எம்.ஜி.ஆர். பாடலில் நடிகர் அரவிந்த் சாமி பாடி நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க