• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிளியோபாட்ரா போன்ற அழகு பெற பசு மாட்டின் சிறுநீரை பயன்படுத்துங்கள்

October 12, 2016 தண்டோரா குழு

உலகிலேயே ஒப்பற்ற அழகை கொண்ட கிளியோபாட்ரா போல் நம் இந்திய நாட்டின் பெண்களும் அழகு பெற வேண்டுமென்றால், பசுவின் சிறுநீரை பயன்படுத்த வேண்டும் என்று குஜராத் மாநில பசு பாதுகாப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய பெண்கள் அழகுடன் திகழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், அவர்களுடைய அழகை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்று தேவையான ஆலோசனையை அந்த வாரியம் அவர்களுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில், பெண்களின் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமென்றால் அவர்கள் பசும்பால், நெய், பசுவின் சாணம் மற்றும் மாட்டின் சிறுநீர் ஆகிய பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் உலக அழகியாக கருதப்பட்ட கிளியோபட்ரா குளிப்பதற்கு பசும்பால் தான் பயன்படுத்தினார்கள் என்று அந்த வாரியம் தெரிவித்துள்ளது. அதே போல், அவர்களுடைய இணையதளத்தில் பல்வேறு வகையான வீட்டு மருத்துகளை பற்றி எடுத்துரைக்கும் ‘ஆயூர்வேத கீதா’ என்னும் பகுதியில் இதுபோன்ற பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பசுவின் சிறுநீர் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மூலம் மற்றவர்களை எளிதில் கவரக்கூடிய தோற்றம் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இத்தாலி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதற்காக பல ஆராய்ச்சிகள் நடந்திருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது.

கிளியோபாட்ரா தன் அழகை மெருகுட்ட உண்மையிலேயே பசும்பாலை பயன்ப்படுத்தினாரா என்ற கேள்வியை அந்த வாரியத்தின் தலைவர் வல்லப கத்ரியாவிடம் கேட்டபொழுது, கிளியோபாட்ரா பசும்பாலில் குளித்திருக்க வாய்ப்பு உண்டு என்று பதில் அளித்துள்ளார்.

மேலும் படிக்க