• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கி தர கோரி மனு

January 13, 2020

உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கி தர கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் உள்ளூர் உழவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு கடைகள் இல்லை என்றும் மலை மாவட்டங்களான நீலகிரி, ஊட்டி, போன்ற இடங்களில் இருந்து வரும் காய்கறிகளை விற்பதற்கு உழவர் சந்தைகளில் இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது என்றும் எனவே உள்ளூர் விவசாயிகள் விவசாயம் செய்த காய்கறி விற்பதற்கு ஆர்.எஸ்.புரம் சிங்காநல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி,

கோவையில் தொண்டாமுத்தூர் கிணத்துக்கடவு சூலூர் போன்ற பல பகுதிகளில் விவசாயம் செய்து கோஸ் பீட்ரூட் போன்ற காய்கறிகளை விளைவித்து வருவதாக வும் ஆனால் அதை உழவர் சந்தைகளில் விற்பதற்கு இடம் தரப்படவில்லை என்று தெரிவித்தார். இது உள்ளூர் விவசாயிகளை புறக்கணிக்கும் செயலாக தெரிகிறது என்று கூறினார் எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக கோவையில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளில் உள்ளூர் விவசாயிகளுக்கும் இடம் ஒதுக்கி தரப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க