• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரமாண்ட உணவு திருவிழா – 150 உணவகங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகள்

January 7, 2020

கோவையில் பிரமாண்ட உணவு திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது 150 உணவகங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகள் பங்கு பெற உள்ளது.

கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத்தினர் சார்பில் கோவையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா வரும் 10 11 12 ஆகிய 3 தேதிகளில் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா துறை கூட வளாகம் செல்லும் வழியில் உள்ள திறந்தவெளியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஸ்டால்கள் மற்றும் பார்க்கிங் வசதி என அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

அப்போது நடைபெற உள்ள உணவுத் திருவிழா குறித்து அதன் தலைவர் பாலச்சந்தர் கூறுகையில்,

வருகின்ற 10, 11, 12 ஆகிய 3 தேதிகளில் உணவு திருவிழா நடைபெற உள்ளது. இந்த உணவு திருவிழாவில் அசைவம் மற்றும் சைவம் என அனைத்து வகையான உணவு வகைகளும் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் கேக் வகைகள் அனைத்தும் அந்த இடத்திலேயே தயாரிக்கப்பட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த விழாவை சிறப்பு படுத்தும் வகையில் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் திரைப்பட பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் இந்த உணவு திருவிழாவிற்கு நுழைவு கட்டணமாக 120 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது மிகவும் குறைந்த கட்டணம் ஆகும் இந்த உணவு திருவிழாவிற்கு வரும் அனைவரும் உணவோடு சேர்த்து இசையையும் கேட்டு செல்லலாம் மேலும் இந்த உணவுத் திருவிழாவில் 150க்கும் அதிகமான உணவகங்கள் இடம்பெற உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க