• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பழங்கால கார்கள் கண்காட்சி

January 4, 2020 தண்டோரா குழு

கோவையில் நடைபெற பழங்கால கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் அணிவகுப்பு கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

கோவை மாவட்டம் உருவான தினத்தை கொண்டாடும் வகையில் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 12 வது கோவை விழா நடைபெற்று வருவதன் ஒரு பகுதியாக கோவை ப்ரோஸோன் மாலில் பழைய கால் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் பழைய காலத்து ஜீப்கள் அம்பாசிடர் கார் பீட்டல் கார் எஸ்டி ஜாவா பைக் வகைகள் இன்றைய உலகிற்கு ஏற்ற நவீன வகை இருசக்கர வாகனங்கள் முதன்முதலில் மாருதி அறிமுகப்படுத்திய சுசுகி 800 வண்டி ஜெர்மன் நாட்டில் அறிமுகப்படுத்திய மூன்று சக்கர வாகனம் மியாட்டா கார், 1955 வோக்ஸ்வேகன் பீட்டல் ,கார்கள் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றன.

இந்த கண்காட்சியை பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.பழங்காலத்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க