• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்ச்சைப் பேச்சு: கமலை நேரில் சந்தித்து விளக்கம் அளித்த ராகவா லாரன்ஸ்!

December 14, 2019 தண்டோரா குழு

சர்ச்சைப் பேச்சு தொடர்பாக கமலை நேரில் சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தர்பார் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கமல் பற்றி தவறாக பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் கமல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் லாரன்ஸ் மீது விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் குறித்து நான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது,இது தொடர்பாக நடிகர் கமலை சந்தித்து விளக்கமளித்தேன் என்று கூறி கமலுடன் இருக்கும் புகைப்படத்துடன் ராகவா லாரன்ஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமிளித்துள்ளேன். இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க