சுவாமி : மாரியம்மன்.
தலவிருட்சம் : வேம்பு மரம்.
தலச்சிறப்பு :
சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற பழமொழிக்கு ஏற்ப பக்தர்களின் கஷ்டங்களை தக்க சமயத்தில் காப்பதாக ஐதீகம். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை, உலக நன்மைக்காக அம்பாளே விரதம் மேற்கொள்கிறார். அந்த விரதம் இனிதே நிறை வேற பக்தர்கள் பூக்களை அம்பாளின் மீது அபிஷேகம் செய்வதே “பூச்சொரிதல்” என கூறப்படுகிறது. அம்பாள் மேற்கொண்டிருக்கும் இந்த விரதத்தை “பச்சை பட்டினி விரதம்” என்பர். பூச்சொரிதல் நாள் முதல் 28 நாட்களுக்கு தளிகை, நெய்வேத்தியம் கிடையாது. இளநீர், கரும்பு, பானகம், துள்ளுமாவு, நீர்மோர் மட்டுமே அம்பாளுக்கு கொடுக்கப்படுகிறது.
தலவரலாறு :
அசுர மன்னனுக்கும், எருமை அரசிற்கும் பிறந்தவன் மகிஷன். பல காலம் செய்த தன் தவங்களினால் கிடைத்த வரங்கள் அவனுக்குச் செருக்கை உண்டாக்கின. எனவே அவன் தேவர் மீது படையெடுத்து அவர்களை வென்றான். ஏழு உலகமும் அவன் பெயர் கேட்டு நடுங்கின. தேவர் துயர் நீக்க துர்கை கடும் தவம் புரிந்தாள் ஒன்பது நாட்கள் மஹிஷனுடன் கடும் போரிட்டு, தசமி அன்று மஹிஷனைக் கொன்று மஹிஷாசுர மர்த்தினி எனப் பெயர் பெற்றார்.
மஹிஷனுடன் போரிட்ட சினம் தணியவும், தன்னுடைய கொடிய தோற்றம் மாறவும் தவம் புரிய என்னினாள் தேவி. தேவி உக்ர சொருபத்துடன் வந்து சேர்ந்த இடம் திருவரங்கம். கோவிலில் ஆராதனை செய்யும் பட்டர்கள் வைஷ்ணவியின் உக்கிரம் தங்காமல், அவளை மக்கள் அதிகமாக செல்லாத வேப்பமரம் சென்று தவம் செய்யுமாறு வேண்டினர். தவத்திற்கு ஏற்ற இடமாக அமைந்தது காவேரி கரையில் உள்ள சமயபுரத்தில் இருந்த வேப்பங்காடு .
கௌமாரி என்னும் பெயருடன் தவம் புரிய வந்த செவ்வந்தி நிறத்துடையாள் மஞ்சள் நிற ஆடை அணிந்தாள். மென்மையான மலர்களால் தன்னை மூடிக்கொண்டாள். உண்ணா நோம்புடன் கடும் தவம் புரிந்தாள். தவம் பலித்தது. துர்கையின் கோபம் தீர்ந்தது. அந்த இடத்தில் வாழ்ந்த மக்களும் அம்மனுக்கு ஒரு ஆலாயம் எழுப்பி வழிபட்டு வந்தார்கள். அன்று முதல் மாரியம்மனாக மக்கள் மனக் குறைய தீர்க்க அன்னை அங்கேயே கோவில் கொண்டு உறைகிறாள் .
கோவிலின் கட்டடக்கலை :
விஜய நகர மன்னர் ஒருவர் தென்னாட்டு படையெடுப்பின் போது மாரியம்மனை தொழுது அவள் ஆசியுடன் வெற்றி பெற்றார். தன் வேண்டுதளை நிறை வேற்றும் விதமாக கௌரிக்குப் பெரிய மதில்களுடன் ஆலயம் எழுப்பி. அதில் பரிவார பரிவர்த்தனைகள் தேவதைகளாக விநாயகரையும், கருப்பண்ண சாமியையும் பிரதிஷ்டை செய்தார்.
கோவிலின் வழிபாடு நேரம் : காலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை.
பூஜை விவரம் :
ஆறு கால பூஜைகள்:-
உசாத் காலம் – காலை 6.00 மணி.
கால சாந்தி – காலை 8.00 மணி.
உச்சி காலம் – பிற்பகல் 12.00 மணி.
சாய ரட்சை – மாலை 6.00 மணி.
இரண்டாம் காலம் – இரவு 8.00 மணி.
அர்த்த ஜாமம் – இரவு 9.00 மணி.
தங்க தேர் – இரவு 7.00 மணி.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
முகவரி : அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,சமயபுரம் – 621 112, திருச்சி மாவட்டம்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா