• Download mobile app
10 Jun 2026, WednesdayEdition - 3773
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி

October 5, 2016 தண்டோரா குழு

கோவையில் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே சிங்காநல்லூர் பகுதியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட, அதை அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழர்களுக்கு தூரோகம் செய்வதாக குற்றம்சாட்டினர். பின்னர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர் காவல் துறையினர் அவர்களை தடுத்து கைது செய்தனர். ஆர்பாட்டத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டனர் அதில் 2 பேர் பெண்கள் ஆகும்.

இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழக ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் கூறுகையில் மத்திய அரசு காவிரி வாரியத்தை உடனடியாக அமைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாய இயக்கங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க