துருவங்கள் 16′ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. இதனையடுத்து அரவிந்தசாமி நடித்த ‘நரகாசுரன்’ படத்தை இயக்கினார். இப்படத்தின் படப்படிப்பு நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இதற்கிடையில், கார்த்திக் நரேன் அடுத்ததாக அருண் நடிக்கும் மாஃபியா படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் பிரசன்னா, நடிகை பிரியா பவானிசங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 6 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்