ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இக்கூட்டணி தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதற்கிடையில் தளபதி 63 படம் குறித்து ஏதாவது அறிவிப்பு வெளியாகுமா? என விஜய் ரசிகர்கள் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் விஜய் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இதையடுத்து, நேற்று தளபதி 63 அப்டேட் குறித்து ட்வீட்டில் , “நானும் உங்க கூட சேர்ந்து எப்போதுமே தளபதி பட அப்டேட் எங்க என்று மற்ற தயாரிப்பாளர்களிடம் கேட்பேன் என்பதை நீங்கள் எல்லாம் மறந்துவிட்டீர்கள். தளபதி 63 அப்டேட் சரியான நேரத்தில் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காகதான் 24 மணிநேரமும் கடுமையாக உழைக்கின்றோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தயாரிப்பாளர் அர்ச்சனா மாலை ஆறு மணிக்கு அப்டேட் வருகிறது தயாராக இருங்கள் என்று விஜய் ரசிகர்களுக்கு அலெர்ட் கொடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து மாலையில் தளபதி 63 அப்டேட்டை வெளியிட்டார். அதில், “ 21ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் 22ஆம் தேதி காலை 12மணிக்கு இரண்டாவது லுக் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார் .
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்