தெறி மெர்சல், படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் – இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படம் தளபதி 63. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதை கருவில் உருவாகி இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இப்படத்தை தொடர்ந்து விஜயின் 64-வது படத்தை மோகன்ராஜா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும் உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் திறமை வாய்ந்த இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. பலரும் விஜய்க்கு கதை கூறி வருகின்றனர். ஆனால், மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் விஜய்க்கு கதையின் ஒன்லைன் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் கூறிய ஒன்லைன் நடிகர் விஜய்க்கு பிடித்துப் போக கதையை மெருகேற்றுமாறு கூறியிருக்கிறாராம். இதனால் விஜய் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்