துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தற்போது, நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பளார், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.
இன்று இவரது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்.17 வருடங்களுக்கு முன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷ் அறிமுகமான நாள் இன்று. இதற்காக அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த முக்கிய நாளில் தனக்கு துணையாக நின்ற தன்னுடைய குடும்பத்தினர்,ரசிகர்கள்,திரைத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தனுஷ் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது கடிதத்தில்,
2002ம் ஆண்டு மே மாதம் 10 தேதி தான் நான் நடித்த முதல் படமான துள்ளுவதோ இளமை படம் வெளியானது. அந்த நாள் என் வாழ்கையை மாற்றிவிட்டது. உண்மையிலேயே இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னால் நம்ப முடியவில்லை? என்னை நம்பி ஒரு நடிகனாக ஆக்கிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு தான் என்னை மெருகேற்றிக்கொள்ள உதவியது. முடிந்தவரை இந்த உலகத்தில் அன்பை பரப்புவோம் எனக் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு