• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகுமாரின் மனைவி தற்கொலை முயற்சி

September 29, 2016 தண்டோரா குழு

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் மனைவி யமுனா விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை துடியலூரில் கடந்த 22ம் தேதி இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்கள் சசிக்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி யமுனாவிடம் ஆறுதல் கூறிவந்தனர்.

சசிக்குமாரின் மறைவுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அவர் கொலை தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சசிக்குமாரின் மனைவி யமுனா இன்று காலை வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் உடனே அவரை மீட்டு துடியலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்து முன்னணியின் மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை விவரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிக்குமாரின் மனைவி நலமுடன் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம்.சசிக்குமாரின் சம்பவம் அவருக்கு திரும்ப திரும்ப நினைவுக்கு வருவதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் அவர் நலமுடன் வீடு திரும்புவர் என தெரிவித்தார்.

மேலும் இது குறித்து மருத்துவமனை உயர் பொறுப்பில் உள்ள சக்திவேலிடம் கேட்ட பொழுது சசிக்குமார் மனைவி யமுனாவிற்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல் நிலை குறித்து தற்போது எதுவும் கூறமுடியாது.மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் உள்ளார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க