• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகுமார் அஸ்தி இன்று கரைப்பு – பாதுகாப்பு தீவிரம்

September 27, 2016 தண்டோரா குழு

இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் அஸ்தியை அவரது குடும்பத்தினர் நாளை கரைக்க உள்ளனர்.

இந்து முன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு துடியலூர் மயானத்தில் தகனம் செய்யப்ட்டது. எனினும், இறுதி ஊர்வலத்தின் போது ஒரு தரப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த கடைகள், பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், துடியலூர் பகுதியில் இரு கடைகள் மற்றும் காவல்துறை வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில், சசிகுமார் அஸ்தி கரைக்கப்படவுள்ளது. இதனால் இன்று கோவையில் ஏதேனும் பதற்ற சூழல் உருவாகுமா? அல்லது இந்து முன்னணி சார்பில் பந்த் ஏதேனும் அறிவிப்பட்டுள்ளதாக என்ற குழப்பத்தில் பொதுமக்கள் உள்ளனர். இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் கிளம்பி வருகின்றது.

இதுகுறித்து இந்து முன்னணி கோவை மாவட்ட வடக்கு செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்திக் கூறும்போது,இன்று நடைபெறவுள்ள சசிகுமார் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் கடையடைப்பு பந்த் நடப்பதாக விஷமிகள் தவறாக தகவலை பரப்பி வருகிறார்கள். இது முழுக்க வதந்தியே யாரும் நம்ப வேண்டாம் என்றும், இன்று சசிகுமார் குடும்பத்தினர் மட்டும் பேரூரில் சடங்குகள் நடத்த உள்ளனர். பின்னர், சாடிவயலில் அவரது அஸ்தி கரைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும்,மற்ற அமைப்பினர் யாரும் சூழ்நிலை காரணமாக கலந்துக் கொள்வதில்லை சில விஷமிகள் இன்று ஊர்வலம்,கடையடைப்புக்கு பந்த் அழைப்பு விடுவித்தாக பல புரளிகளை பரப்புகிறார்கள். இன்று இந்துமுன்னணி சார்பில் எந்த நிகழ்ச்சியும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

அதைபோல் இன்று எந்த விதமான பந்த் மற்றும் கடையடைப்பு எதுவும் கிடையாது என்றும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும் முழு பாதுக்காப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க