• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேராசிரியர் ரம்யா கொலை வழக்கில் நாளை தீர்ப்பு !

September 27, 2016 தண்டோரா குழு

கோவையில் பேராசிரியர் ரம்யா கொலை செய்யபட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப் படவுள்ளதாக கோவை மகளிர் நீதிமன்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த ரம்யா என்பவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3.11.2014 அன்று அவரது வீட்டில் தலையில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் அவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காரமடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து தென்காசியை சேர்ந்த மகேஷ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் தென்காசியை சேர்ந்த மகேஷ் என்பவர் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று குடிப்போதையில் ஆசிரியர் காலனி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது பேராசிரியர் ரம்யா அவ்வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது அவரது நகையை திருட வேண்டும் என்பதற்காக அவரை பின்தொடர்ந்து சென்று வீட்டின் உள்ளே நுழைந்து ரம்யாவை தாக்கியுள்ளார், தடுக்க வந்த அவரது தாயார் மாலினியையும் தாக்கியுள்ளர். இதில் சம்பவ இடத்திலேயே ரம்யா தலையில் அடிப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தெரியவந்தது.

இதையடுத்து, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் நிறைவுப்பெற்று கொலையாளி ரமேஷ் குற்றவாளி என உறுதி செய்யப்படுகிறது என நீதிபதி ராஜா அறிவித்தார். மேலும் ரமேஷ் மீது கொலைமுயற்சி,திருட்டு என ஐந்து பிரிவுகளின் கீழ் நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க