• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆரோக்கியத்திற்கு தேவையான சகலகலா சக்தி தரும் “புரோட்டீன் அடை” ரெசிபி!

March 18, 2019 tamil.webdunia.com

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சக்தியை நாள்முழுவதும் தரும் சுவையான சத்து நிறைந்த புரோட்டீன் அடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி – 200 கிராம்,
முளைகட்டிய பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, கோதுமை மற்றும் உளுந்து – தலா 100 கிராம்,
காய்ந்த மிளகாய் – 4,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு,
உப்பு எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

1. இட்லி அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து எடுத்துக்கொள்ளவும்.

2. அதனுடன் முளைகட்டிய பயறு வகைகள், காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி சேர்த்து அடைமாவுப் பதத்தில் கரகரப்பாக அரைத்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.

3. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து மாவைப் பரவலாக ஊற்றி மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கத்தால் சுவையான புரோட்டீன் அடை தயார்!

மேலும் படிக்க