• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேச்சுவார்த்தைக்கு வருமாறு நாராயணசாமிக்கு கிரண்பேடி மீண்டும் அழைப்பு

February 18, 2019 தண்டோரா குழு

புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் தலைகவச உத்தரவை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனையடுத்து, மாநில அரசு செயல்படுத்த முடிவு செய்த 30 நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கிரண்பேடி மறுத்துள்ளதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி, ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடியை நீக்க கோரி 6 வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் கிரண்பேடி மீண்டும் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில்,கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறேன். மக்கள் பிரச்னை முக்கியம் என்பதால் 39 கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மேலும் படிக்க