• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீவிரவாதிகள் தாக்குதல் : பிரதமர் மோடி தலைமையில் அவசர மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

February 15, 2019 தண்டோரா குழு

பாதுகாப்புக்கான அவசர மத்திய அமைச்சரவை குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகாரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. தொடர்ந்து பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு இதற்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று காலை 9.15-க்கு கூடியது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அருண்ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க