• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று நேர போராட்டத்திற்கு பிறகு சின்னத்தம்பி யானைக்கு மயக்க ஊசி செலுத்திய வனத்துறை

February 15, 2019 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் சின்னதம்பி யானைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர்.

கோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் பிடித்து பொள்ளாச்சி டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விட்டனர். ஆனால் சின்னத்தம்பி யானை 100 கி.மீ. தூரம் நடந்தே வந்து மீண்டும் உடுமலைக்குள் நுழைந்தது. கண்ணாடிபுத்தூர் என்ற ஊரில் கடந்த 6 நாட்களாக முகாமிட்டிருந்தது. எனினும் யாருக்கும் எவ்வித தொந்தரவையும் கொடுக்காமல் இருந்து வந்தது.

இதனிடையே சின்னதம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் கும்கியானை உதவியுடன் சின்னதம்பியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டனர். ஆனால் அந்த கும்கி யானையுடன், சின்னதம்பி யானை நண்பனாக பழகி விளையாடி வந்ததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையில், உடுமலை பகுதியில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் சின்னத்தம்பியை பிடிக்கும் போது துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, சின்னதம்பியை பிடிக்கும் பணிகள் நேற்று மீண்டும் தொடங்கியது.

கண்ணாடிப்புத்தூரில் சின்னதம்பி தஞ்சம் அடைந்துள்ள பகுதிக்கு அருகே பொக்லைன் இயந்திரம் வந்து செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் யானை பிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 மருத்துவர்களில் ஒரு மருத்துவர் வராததாலும், அதிகாரிகளிடமிருந்து முறையான உத்தரவு வராததாலும் யானையை பிடிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் கரும்பு தோப்பில் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பி யானைக்கு முதலில் ஊசியைக் மருத்துவர் அசோகன் செலுத்தினார்.ஆனால் அது தவறியது.இரண்டாவது ஊசியைக் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி தங்கராஜ் பன்னீர்சசெல்வம் செலுத்தினார். அது யானையின் பின்னங்காலில் செலுத்தப்பட்டது. தங்கராஜ் செலுத்த முயன்ற மூன்றாவதும் தவறியது. பின்னர் ஐந்தாவது முறையாக செலுத்திய மயக்க ஊசி யானை மீதுபட்டது. எனினும், சின்னத்தம்பி மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டது.

சின்னத்தம்பி யானையை பிடிக்க கரும்பு காட்டுக்குள் கலீம் மற்றும் சுயம்பு ஆகிய இரு கும்கி யானைகள் உடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க