• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோர்களுக்கான கூட்டம்

February 13, 2019 தண்டோரா குழு

கோவையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தேசிய சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பு சார்பில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் உள்ள எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி இன்று காலை கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

சி.ஐ.ஐ கோவை மண்டல நிர்வாக இயக்குனர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். நேஷனல் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக மேலாளர் ஜி. கண்ணன், மாவட்ட தொழில் நிறுவனங்கள் மைய நிர்வாக மேலாளர் கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், போல் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம், காமராஜ் போர்ட், எல்.என்.டி ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்.சி ,எஸ்.டி தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

பொது நிறுவனங்களில் எவ்வாறு பதிவு செய்து தொழில் வாய்ப்புகளை பெறுவது என்பது குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. இறுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் நவநீத சிவகுமார் நன்றியுரை ஆற்றினார்.

மேலும் படிக்க