• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரைத்து விட்ட சாம்பார் செய்வது எப்படி…?

February 12, 2019 tamil.webdunia.com

தேவையானவை:

வெங்காயம் – 1
தக்காளி – 2
பெருங்காயம் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – தலா 2
புளி – நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

வறுத்து அரைக்க:

துவரம்பருப்பு – அரை கப்
காய்ந்த மிளகாய் – 6
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன் தாளிக்க
கடுகு – 1 டீஸ்பூன் தாளிக்க
செய்முறை:

துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சிறு தீயில் காய்ந்த மிளகாய், தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வறுத்து ஆறவைத்து அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து வடிகட்டி ஊற்றி, பெருங்காயம் கறிவேப்பிலை, உப்பு, தக்காளி சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த பருப்பைக் கரைத்து ஊற்றி அத்துடன் அரைத்த விழுதையும் கரைத்து ஊற்றி, நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, கடுகு, உளுந்து தாளித்துக் கொட்டவும். மேலே கறிவேப்பிலை கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

சுவையான அரைத்து விட்ட சாம்பார் தயார். இது இட்லி, தோசை பொங்கலுடன் பரிமாற ஏற்றது.

மேலும் படிக்க