• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 7 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது

February 12, 2019 தண்டோரா குழு

கோவை பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச்சேர்ந்தவர் 35 வயதான தந்தை. இவர் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆயா வேலை பார்த்து வருகிறார். இவரும் 13 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இவர்களது மகள், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு , மனைவி வேலைக்கு சென்று விட , மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தவரை அவரது தந்தை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். இது தொடர்கதையாகியுள்ளது. இது அவரது மனைவிக்கு தெரியாமல் இருந்துள்ளது.

இதற்கிடையில், தனது மகளை சிகிச்சைக்காக , அரசு மருத்துவமனை அழைத்து வந்துள்ளனர். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மகள் கர்ப்பமாக இருப்பதாக அறிந்த தாய் அதிர்ச்சியடைந்து மகளிடம் கேட்டதில் , தந்தை தான் இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் , பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்துள்ளனர். ஏற்கனவே செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தந்தை மற்றும் அவரது சகோதரர் இணைந்து சிறுமியை கற்பழித்த சம்பவத்தில் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோவையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது, வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க