• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துருவ் விக்ரமின் வர்மா படம் கைவிடப்பட்டது – பாலாவிற்கு பதில் புதிய இயக்குனர் !

February 7, 2019 தண்டோரா குழு

கடந்த ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யமுடிவு செய்யபட்டு தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாலா இயக்கத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிப்பில் வர்மா என்ற தலைப்பில் இப்படம் உருவாகி வந்தது. அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன் உட்பட பலர் நடித்துள்ளனர். ரதன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகிய இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து.

படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், இந்தப்படம் கைவிடப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குனர் பாலா இந்த படத்தை விட்டு சென்றதாகவும். வேறொரு இயக்குனர் இந்த படத்தை மீண்டும் ஷூட் செய்ய தாயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதே கதை புதிய இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் பட நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் துருவ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். மூன்று மாதத்தில் படத்தின் ஷூட்டிங் முடித்து திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகிறது.

மேலும் படிக்க