• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் ரசிகர்களால் விஜய் 63 படக்குழுவிற்கு சிரமம்

February 5, 2019 தண்டோரா குழு

சென்னையில் நடந்து வரும் நடிகர் விஜயின் படப்பிடிப்பை காண வரும் ரசிகர்களால் படக்குழுவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து அட்லீயின் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடிகர் விஜய் நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி சென்னை பின்னி மில்லில் நடந்து வருகிறது. இந்நிலையில், இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பை காண படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகே தினமும் கூடுவதால் படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் வேறு வழியின்றி சென்னையில் நடக்கும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு மாற்றலாமா என படக்குழு யோசித்து வருவதாக சமீபத்தில் தகவல் பரவியது.

ஆனால் படக்குழு அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரசிகர்கள் வருவதால் ஷூட்டிங் நடத்த சிரமம் இருப்பது என்னவோ உண்மைதான், ஆனால் படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை என கூறியுள்ளனர். படப்பிடிப்பு தொடங்கிய தினத்தில் இருந்து நாள்தோறும் ரசிகர்களின் வரவு அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது என்றாலும் நடிகர் விஜய் ரசிகர்களை தவிர்த்துவிட்டு செல்லவில்லை ரசிகர்களை பார்த்து கை அசத்து விட்டு தான் படப்பிடிப்பு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க