• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடி அரசியலிலிருந்து விலகி விட்டால், நானும் விலகி விடுவேன் – ஸ்மிருதி இராணி

February 4, 2019 தண்டோரா குழு

மோடி அரசியலிலிருந்து விலகி விட்டால், நானும் விலகி விடுவேன் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இன்று மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சிறந்த தலைவர்களுடன் நான் அரசியலில் பணியாற்றி வருகிறேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையின் கீழ் பணியாற்றியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஒருவேளை பிரதமர் மோடி அரசியலை விட்டு ஓய்வு பெறும் போது, நானும் அரசியலில் இருந்து விலகி விடுவேன். நான் அமேதி தொகுதியில் போட்டியிடுவேனா என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இது குறித்து கட்சித்தலைவர் அமித்ஷா தான் முடிவு செய்வார் என்றார்.

மேலும் படிக்க