• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர டிராபிக் ராமசாமி முடிவு

February 1, 2019 தண்டோரா குழு

கோவையில் சூயஸ் நிறுவனம் மூலம் 24ம் மணி நேரம் குடிநீர் திட்டத்தில் மோசடி நடந்து இருப்பதாகவும் சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்க இருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

கோவையில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர் பேசிய டிராபிக் ராமசாமி,

கோவையில் சூயஸ் நிறுவனம் மூலம் 24 ம் மணி நேரம் குடிநீர் திட்டத்தில் மோசடி நடந்து இருப்பதாகவும், வெளிநாட்டு நிறுவனம் சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த்தில் நிறைய குளறுபடிகள் இருப்பதாகவும், சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், சூயஸ் திட்டத்திற்கு நிரந்தர தடை வாங்கும் நிலையை ஏற்படுத்துவோம் என்றும், ஊழல்வாதிகளை நீதிமன்றம் நிச்சயம் தண்டிக்கும். துறைசார்ந்த அமைச்சருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் என நினைக்கிறன். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர்கள் கொடுக்கும் பதில்களில் தில்லுமுல்லு செய்வதாக தெரிவித்த டிராபிக் ராமசாமி, பணம் கட்டியும் தகவல் வருவதில்லை, அங்கயும் ஊழல் நடப்பதாகவும் நியாமன கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் காதுக்கொடுக்கும். ஊழல் குற்றவாளிகளை நிச்சயம் நீதிமன்றம் தண்டிக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க