• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 4 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை – இருவர் கைது

February 1, 2019 தண்டோரா குழு

கோவையில் 4 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை காரமடையில் உள்ள தனியார் பள்ளியின் 3ம் எண் கொண்ட வாகனத்தின் ஓட்டுனர் கோவிந்தராஜ் மற்றும் நடத்துனர் மாரிமுத்து. இருவரும் கடந்த செவ்வாய்கிழமை பள்ளி வாகனத்தில் வந்த அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி வாகனத்திலேயே பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அச்சிறுமி பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து துடியலூர் அனைத்து
மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பள்ளி வாகன ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் கிளீநர் மாரிமுத்து ஆகிய இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க