• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் : கோவை மண்டல சி.ஐ.ஐ சங்கத்தினர் வரவேற்பு

February 1, 2019 தண்டோரா குழு

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் தொலை நோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் என்று கோவை மண்டல சி.ஐ.ஐ சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் ரமேஷ் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த பட்ஜெட்டில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சமாக உயர்த்தியது வரவேற்கதக்கது. இது தொழில் முனைவர்களுக்கு பயன் தரும். சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஜி.எஸ்.டி வரி பதிவு செய்தால் போதும் என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது. இது சிறு குறு தொழில் துறையினரின் சுமையை குறைத்ததாகவும் கூறினார்.

மேலும் படிக்க