• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வர் பற்றி பேச மேத்யூ சாமுவேலுக்கு தடை நீட்டிப்பு!

January 31, 2019 தண்டோரா குழு

முதல்-அமைச்சர் குறித்து செய்தி வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலளிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டது புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.இந்நிலையில், பத்திரிகையாளர் மேத்யூவுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கடந்த 23-ந்தேதி விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், முதல்அமைச்சர் குறித்து அவதூறு செய்தி வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேத்யூ சாமுவேலுக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் நோட்டீசு மேத்யூ சாமுவேலுக்கு சென்றடையவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை முதல்அமைச்சர் குறித்து செய்தி வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க