• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அமைச்சர் மீது மை வீசிய மாணவர்கள்

September 17, 2016 தண்டோரா குழு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிடுவதற்காக வந்த மத்திய அமைச்சர் நாட்டா மீது மாணவர்கள் மை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர்கள் அடிப்படை கட்டமைப்பு வசதி கோரி பல முறை கல்லூரி நிர்வாகம், சுகாதார துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளனர்.எனினும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி. நாட்டா கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது, அமைச்சரிடம் தங்கள் குறைகளை கூற மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் அமைச்சர் அவர்களிடம் பேசமால் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவர் மீது மை வீசினர்.

இதையெடுத்து, அமைச்சரை மாணவர்களிடம் இருந்து மீட்ட அதிகாரிகள், அங்கிருந்து பாதுகாப்பாக, அழைத்துச் சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். அமைச்சர் மீது மை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க