 January 9, 2019
January 9, 2019  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் கண்ணம்மா பாடல் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். இந்த படத்தை புரியாத புதிர் படத்தை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். 
இந்த படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். இந்த படத்தில் நாயகன் பாடும் கண்ணம்மா பாடலை அனிருத் பாடியுள்ளார். முன்னதாக சாம்.சி.எஸ் இசையில் விக்ரம் வேதா படத்தில் இடம் பெற்ற ‘யாஞ்சி யாஞ்சி’ பாடலை அனிருத் பாடி இருந்தார். இந்த பாடல் வெரும் வரவேற்பை பெற்றது. 
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணியில் புதிய பாடல் உருவாகி உள்ளது. இந்த பாடலின் முன்னோட்டம் தற்போது யூடியூப்பில் வெளியாகி உள்ளது. மேலும் இப்படக்குழுவினருக்கு இசையமைப்பாளர் அனிருத் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.